பெண்ணொருவர் தாக்கியதில், ஆண் உயிரிழந்துள்ளார்.
நவகமுவ-ரனால பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் வசித்து வந்த இருவருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இருவரும் இரு மாதங்களுக்கு முன்னர் வாடகை வீட்டில், திருமணம் முடிக்காமல் வாழ்ந்து வந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் நேற்று மாலை மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து, குறித்த பெண்ணுடன் முரண்பட்டதுடன் பெண்ணின் தலையைப் பொல்லால் தாக்கியதாகவும் தெரியவருகிறது.
இதனையடுத்து, பெண் தனது கையிலிருந்து கூரிய ஆயுதத்தால் தாக்கியபோது பலத்த காயங்களுக்குள்ளான நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் காயங்ளுக்குள்ளான பெண் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#SrilankaNews
Leave a comment