மூன்றுவேளை உணவையும் தவறாது எடுங்கள் - வைத்தியர் ஆலோசனை
செய்திகள்இலங்கை

மூன்றுவேளை உணவையும் தவறாது எடுங்கள் – வைத்தியர் ஆலோசனை

Share

மூன்றுவேளை உணவையும் தவறாது எடுங்கள் – வைத்தியர் ஆலோசனை

நாடுமுழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் கொரோனா வைரஸில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்பது மிக அவசியம் என சுகாதார துறையினர் குறிப்பிடுகின்றனர்.

இது தொடர்பில் விசேட வைத்தியர் ரணில் ஜயவர்தன தெரிவிக்கையில்,

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உணவில் அதிகமாக கீரை வகைகள், பழங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த கொரோனாவுக்கென குறிப்பிட்ட மருந்து எதுவும் இல்லாத நிலையில் மக்களுக்கான ஒரே தீர்வு அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதே. இந்த நிலையில் தற்போதைய சூழ்நிலை, மக்களின் உள ஆரோக்கியத்தை பாதிக்க கூடும் என்பதால், அனைவரும் மூன்று வேளை உணவுகளையும் தவறாது உண்ண வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்திக்கு அவசியமான விட்டமின் சி  மரக்கறிகள் மற்றும் பழங்களிலிருந்து கிடைக்கின்றன. நாளொன்றுக்கு குறைந்தது 3 வகையான மரக்கறிகள் சாப்பிட வேண்டும். புரதம் உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். அன்றாட வாழ்வில் பால், பழவகைகள், தானிய வகை உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி: பண்டிகை முற்பணம் ரூ. 15,000 ஆக உயர்வு! இடர் கடன் முற்பணம் ரூ. 4 இலட்சமாக அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணம் (Festival Advance) மற்றும் இடர் கடன் முற்பணம் (Distress...

MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...