WhatsApp Image 2022 03 08 at 7.17.04 AM
செய்திகள்இலங்கை

மஹிந்தவின் மகளிர் தின வாழ்த்துச்செய்தி!!

Share

வீரப் பெண் தலைமுறையின் வரலாற்றை பின்பற்றி இலங்கைப் பெண்கள் இன்று சமூகப் பொறுப்புடன் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:

“”ஒரு தாயாக, மகளாக, சகோதரியாக மற்றும் பாட்டியாக ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வழிநடத்தும் துணிச்சலான பெண்களின் அர்ப்பணிப்பை நினைவுகூரும் சர்வதேச மகளிர் தினத்தில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.””

ஒரு நிலையான சமுதாயத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் கருணை, ஆளுமை ஆகியவற்றைப் பகிரும் ஒரு பெண்ணின் பெருமையை ஒரு நாளுக்கு மட்டும் வரையறுக்க முடியாது.

மனித இனத்தை மாற்றிய அனைத்து தீர்க்கதரிசிகளின் பிறப்பு முதல், மனித இருப்பை அடையும் வரை அனைத்திற்கும் பெண்தான் காரணம் என்பது இரகசியமல்ல.

ிஇதனால்தான், பிரபல ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கோர்க்கி அவர்கள், சூரிய ஒளி மற்றும் தாய்ப்பாலில் இருந்தே உலகம் படைக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

வீரப் பெண் தலைமுறையின் வரலாற்றை பின்பற்றி இலங்கைப் பெண்கள் இன்று சமூகப் பொறுப்புடன் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர்.

இந்த தைரியமான பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக நமது அரசாங்கம் தொடர்ந்து பணியாற்றும் என்று நான் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறேன்.

“நிலையான எதிர்காலத்திற்கு இன்று பாலின சமத்துவம்” என்ற சர்வதேச எண்ணக்கருவின் கீழ் கொண்டாடப்படும் இம்முறை சர்வதேச மகளிர் தினத்தில் உங்களுக்கு எதிரான வன்முறைகளும் பாகுபாடுகளும் இலங்கை சமூகத்திலிருந்து துடைத்தழிக்கப்படும் தினத்தை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும்.

“அவள் ஒரு நாடு, ஒரு தேசம், ஒரு உலகம்” என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தின் ஊடாக நாட்டின் உயிர்நாடியாக விளங்கும் பெண்களின் பங்கு சரியான முறையில் பாராட்டப்படும் என நம்புகிறேன்.

கொவிட் தொற்றுநோய் நிலைமைக்கு மத்தியில் ஏற்பட்ட பல்வேறு சிரமங்களை சமாளிப்பதற்கு தொலைநோக்கு சிந்தனையுடன், சிக்கனமாகவும் பொறுமையாகவும் செயற்படும் பெண்கள் நாட்டில் காணப்படும் சவால்களை வெற்றி கொள்வதற்கு பெற்றுக் கொடுக்கும் சிறந்த பங்களிப்பு நம் அனைவருக்குமான தைரியமாகும்.

நீங்கள் “அவளுக்கு” பெருமை சேர்ப்பதற்கு இருமுறை சிந்திக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். என்றுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...