விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேமீது அரசாங்கத்தின் பங்காளிக்கட்சி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாட்டால் விவசாயத்துறை அமைச்சரை விவசாயிகள், விளாசித்தள்ளிவருவதுடன், அவருக்கு எதிராக இன்றளவிலும் போராட்டங்கள் தொடர்கின்றன.
இந்நிலையில் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியொன்றும் விமர்சனத்தை முன்வைத்துள்ளமை அமைச்சருக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
” விவசாயத்துறை அமைச்சருக்கு விவசாயம் பற்றி போதிய அனுபவம் இல்லை. இரசாயன உரத்துக்கு ஒரேடியாக தடை விதிப்பதைவிட, கட்டம்கட்டாக அதற்கான பணியை செய்திருக்க வேண்டும். தற்போது முழு அரசாங்கத்துக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.” – என்று சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.