3 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இராணுவ கண்காணிப்புக்கு மத்தியில் ரவிராஜ் இல்லத்தில் நினைவேந்தல்

Share

இராணுவ கண்காணிப்புக்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் சாவகச்சேரிலுள்ள மாமனிதர் நடராஜா ரவிராஜ் இல்லத்தில் மாலை 6.05 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சாவகச்சேரி பிரதேச சபை உபதவிசாளர் செ.மயூரன், சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் சி.சிவநேசன் ஆகியோர் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

பிரதான ஈகைச்சுடரை மூன்று மாவீரர்களின் சகோதரன் சிவஞானம் சிவநேசன் ஏற்றி வைத்தார்.

அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றவேளையில் இராணுவத்தினர், பொலிஸார், மற்றும் இராணுவ புலனாய்வாளர்கள் ரவிராஜின் வீட்டை சுற்றிவளைத்துடன், வீட்டுக்குள் நுழைந்து தீபமேற்றி அஞ்சலி செலுத்தியவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தடைசெய்யப்பட்ட நினைவுச் சின்னங்களை வைத்து அஞ்சலி செலுத்தினார்களா என்று விசாரணை செய்த பின்னர் இராணுவத்தினர் அவ்விடத்தில் இருந்து அகன்று சென்றனர்.

3 4  3 1 3 2

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...