யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் உள்ள வீட்டின் மீது தாக்குதல் நடத்திய குழுவைச் சேர்ந்த மூவர் கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் மோட்டார் சைக்கிளில் வந்த குழு ஒன்று அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், விரைந்து செயற்பட்ட கோப்பாய் பொலிஸார் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து சந்தேகநபர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
காதல் விவகாரம் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. மேலதிக விசாரணைகள் இடன்பெற்று வருகின்றன என கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews