WhatsApp Image 2021 09 15 at 6.27.17 AM e1631744381328
செய்திகள்இலங்கை

லொஹான் விடயத்தில் சுயாதீன விசாரணை வேண்டும்! – ஐ.ம.ச.

Share

லொஹான் விடயத்தில் சுயாதீன விசாரணை வேண்டும்! – ஐ.ம.ச.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் குற்றவியல் மற்றும் சட்டவிரோத செயற்பாடு தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார. நீதி அமைச்சர்
ஏம்.யு.எம் அலிசப்ரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கோரியுள்ளார்.

இந்த கடிதத்தத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கடந்த இரு தினங்களாக அநுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்குள் அத்துமீறி பிரவேசித்து தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த இரண்டு சம்பங்களும் இடம்பெறும்போது அமைச்சர் மதுபோதையில் இருந்தார் என குறிப்பிடப்படுகின்றது.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கைதிகள் சிலரை அழைத்துவரச் செய்து அவர்களை முழந்தாளிட வைத்து அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை மிகப்பெரும் குற்றமாக கருதப்படுகின்றது.

இது ஒரு பயங்கரமான சூழ்நிலை என்பதோடு அந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஆயுதங்களுடன் இருந்தார் என குறிப்பிடப்படுகின்றது. அதற்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ள அமைச்சர் தமது நண்ப நண்பிகள் சிலருக்கு தூக்கு மரத்தை காட்டுகிறேன் என அச்சுறுத்தியிருக்கின்றார்.

அந்த சந்தர்ப்பத்தில் அவரின் நண்பர்களும் குடிபோதையில் இருந்ததுள்ளனர். ரத்வத்தவிடம் ஆயுதம் காணப்பட்டது எனவும் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது,.

குறிப்பிட்ட நேரத்திலல்லாது வேறு நேரத்திலே இராஜாங்க அமைச்சர் இரண்டு சிறைச்சாலைகளுக்கும் அத்துமீறி நுழைந்துள்ளார். சிறைச்சாலைக்குள் பார்வையாளர்கள் வருவதற்கு தடைசெய்யப்பட்டுள்ள சந்தர்ப்பத்திலே அவர் சென்றுள்ளார்.

இது தமது அதிகாரத்தை துஸ்பிரயோகப்படுத்தும் செயற்பாடாகும். அத்தோடு இது சிறைக்கைதிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஆகும். சிறைச்சாலை அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு விடுக்கப்பட்ட அழுத்தங்களாகவே கருது முடியும். அத்தோடு அவர்களின் கீர்த்தி, நாமத்துக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவே கருத வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் குழு கூட்டத்தோடு ஜெனீவாவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாநாடு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான செயற்பாடுகள் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயலாகும்.

எனவே இது தொடர்பில் சுயாதீனமான பக்கசார்பற்ற விசாரணை ஒன்றை நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக கோரிக்கை விடுக்கின்றோம்.

இந்த சந்தர்ப்பத்தில் சிசிரிவி காட்சிகளில் மாற்றங்கள் மேற்கொள்வதற்கு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்காமல் இருப்பதற்கு ஆவண செய்ய வேண்டும். இந்த விசாரணைகள் சுயாதீனமாகவும் உயர்ந்த தரப்பினர்களாலும் முன்னெடுக்கப்பட வேண்டும். இது தொடர்பில் உங்களின் சாதகமான பதில் ஒன்றை எதிர்பார்க்கின்றோம். – என்றுள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
44522559 ravann
செய்திகள்உலகம்

மதுரோ பாணி கைது புதினுக்குப் பொருந்தாது: உக்ரைன் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பும் ட்ரம்பின் நேரடிப் பதிலும்!

வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே போன்றதொரு...

images 4 3
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி; கைதை வெறும் கண்துடைப்பாக மாற்ற வேண்டாம் – சட்டத்தரணி சுகாஸ் கடும் சாடல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியாளர் மட்டுமல்ல, அவர் தமிழர்களுக்கு எதிரான பல...

black flag
செய்திகள்இலங்கை

பெப்ரவரி 04 தமிழர்களின் கரிநாள்: கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் பாரிய பேரணிக்கு அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியை, தமிழர் தேசத்தின் “கரிநாளாக”...

External Affairs Minister S Jaishankar calls on Sri Lankan President Anura Kumara Dissanayake in Colombo on Tuesday. ANI
செய்திகள்இலங்கை

இலங்கை அரசியலில் இராஜதந்திரப் போர்: இந்தியாவின் $450 மில்லியன் நிதியுதவியும், சீனாவின் அடுத்தகட்ட நகர்வும்!

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய மற்றும் சீன உயர்மட்டத் தூதுவர்களின் சந்திப்புகள் குறித்து இதுவரை...