மேலும் இரு வாரங்களுக்கு நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலைமை நீடிக்கப்பட வேண்டும் என்று கொவிட்-19 கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சர், மருத்துவ வல்லுநர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தினசரி சுமார் 5 ஆயிரம் பேர் வரை கொவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால் மருத்துவ வல்லுநர்களின் கருத்துப்படி சமூகத்தில் சுமார் 50 ஆயிரம் நோயாளர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையைக் கருத்தில் கொண்டு நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலைமையை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து என தெரிவித்துள்ளார்.
Leave a comment