பலாங்கொடை – கூரகலை விகாரைக்கு வழிபாடு செய்ய வந்த இளைஞர் ஒருவர், அங்குள்ள தூவிலிஎல்ல நீர்வீழ்ச்சிக்கு நீராடச் சென்றபோது அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த நபர் மாத்தறை – மாய்ம்மன பகுதியைச் சேர்ந்த 28 வயதான சந்திமால் புத்திக என்பவராவார்.
இவரோடு விகாரைக்குப் பயணித்த குழுவினர் இவ்விடயம் தொடர்பில் கல்தோட்டைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இளைஞரின் சடலத்தை மீட்டுள்ள கல்தோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, தூவிலஎல்ல மற்றும் இப்பகுதி நீர்நிலைகளில் இத்தினங்களில் நீரின் வேகம் அதிகரித்துள்ளதால் மிக அவதானமாக நீராடுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
#SriLankaNews