புத்தூர் சந்தி, தட்டாங்குளம் பகுதியில் இரண்டு கிராம் 550 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரை இம் மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் நேற்று (16) உத்தரவிட்டார்.
மேற்படி பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக சாவகச்சேரி மதுவரி நிலையத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியாக தகவலை அடுத்து நேற்று (16) காலை 9.00 மணியளவில் அப் பகுதியில் சோதனை மேற்கொண்ட போது அப் பகுதியைச் சேர்ந்த 32 வயது சந்தேக நபரிடம் இருந்து இரண்டு கிராம் 550 மில்லிக் கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டது.
சந்தேக நபர் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது அவரை இம் மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஏ.ஜூன்சன் உத்தரவிட்டார்.
#SriLankaNews
Leave a comment