jaffna
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

புத்தூரில் கடத்தப்பட்ட இளைஞர் கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு!

Share

யாழ்., புத்தூர் மேற்கு, நவக்கிரி பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட இளைஞர் கைகள் கட்டடப்பட்ட நிலையில் அவரது வீட்டுக்கு அருகில் மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நவக்கிரி சனசமூக நிலையத்தடியில் இன்று மாலை மீட்கப்பட்ட குறித்த இளைஞர் சிகிச்சைக்காக அச்சுவேலி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

புத்தூர் மேற்கு, நவக்கிரியைச் சேர்ந்த அருந்தவராசா சயந்தன் (வயது 30) எனும் இளைஞர் கடந்த சனிக்கிழமை இரவு மின்சாரம் தடைப்பட்டு இருந்த வேளை இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளார் என அவரது உறவினர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

வீட்டு வளாகத்தில் இருந்து எவரோ பாய்ந்து வெளியே செல்வதை அவதானித்த இளைஞர் வீட்டுக்கு வெளியே சென்று பார்த்தார் என்றும், வெளியே சென்ற இளைஞரை வீட்டின் முன்புறம் உள்ள தோட்ட வெளியில் நின்றிருந்த மூவர் துரத்திச் சென்றனர் என்றும் உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தனர்.

அதன்பின்னர் இளைஞர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடியபோது அவரது கைபேசி வீட்டிலிருந்து சுமார் 400 மீற்றர் தூரத்தில் கண்டெடுக்கப்பட்டது.

அதேநேரம், கடந்த 12ஆம் திகதி இளைஞரின் வீட்டுக்கு வந்து இனந்தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர். அதில் வெட்டுக்காயத்துக்குள்ளான இளைஞரின் தந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட இருவர் நீதிமன்றதத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இளைஞர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்தநிலையில், இரண்டு நாள்களின் பின்னர் கடத்தப்பட்ட இளைஞர் கைகள் கட்டப்பட்ட நிலையில் நவக்கிரி சனசமூக நிலையத்துக்கு அண்மையில் இன்று மாலை மீட்கப்பட்டார்

அச்சுவேலி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள இளைஞனிடம், சிகிச்சையின் பின்னர் வாக்குமூலம் பெறப்படும் என்று அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...