வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வவுனியா- மணிபுரம் பகுதியில் வசிக்கும் இளம் யுவதியொருவர் தாய், தந்தை வேலை நிமித்தம் வெளியே சென்றதற்குப் பின்னர் குறித்த யுவதி அவரது வீட்டு அறையில் தூக்கில் தொங்கியுள்ளார்.
தாய் , தந்தை காலை 11 மணியளவில் வீட்டிற்கு திரும்பிய நேரத்தில் மகள் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த மகளை மீட்டு, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.
#SrilankaNews

