vava 2 scaled
இலங்கைசெய்திகள்

11 மாத குழந்தையுடன் மாயமான இளம் தாய் காட்டிலிருந்து சடலங்கள் மீட்பு

Share

11 மாத குழந்தையுடன் மாயமான இளம் தாய் காட்டிலிருந்து சடலங்கள் மீட்பு

அங்குருவாதொட்ட – உருதுதாவ பிரதேசத்தில் இருந்து காணாமல்போன இளம் தாய் மற்றும் குழந்தை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் சடலங்கள் இரத்மல்கொட காட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உருதுதாவ பகுதியினை சேர்ந்த வாசனா குமாரி என்ற 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயும், அவரது 11 மாத மகளும் கடந்த 18ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளதாக குறித்த பெண்ணின் கணவர் அங்குருவாதொட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதன் பின்னர் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்த நிலையிலேயே இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
manokanesan
இலங்கை

அரசை வீட்டிற்கு அனுப்புவோம் – மனோ கணேசன் சூளுரை.

“நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படக் கூடாது எனவும் 2029ஆம் ஆண்டு...

thadampuralvu
இலங்கை

மீண்டும் தடம் புரண்டது 1164 இலக்க தொடருந்து.

சற்றுமுன்னர் கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளதாள், தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகளின்...

train
இலங்கை

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.

நேற்று மாலை, கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

dengu 19
இலங்கை

டெங்கு நோயாளிகளுக்கு மற்றுமொரு வைரசாலும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நேற்றைய தினம் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு...