பொலிஸ் நிலையம் அருகில் இளைஞன் சாவு! – கொலையென சந்தேகம்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் அருகில் மயங்கி கிடந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞரின் மரணம் தொடர்பில் உறவினர்கள் கொலை என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தால் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்துக்கு 50 மீற்றர் தூரத்தில் நேற்றையதினம் பிற்பகல் 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
வீதியின் ஓரத்தில் மயங்கி வீழ்ந்து கிடந்துள்ள நிலையில் அவரை மீட்டு தெல்லிப்பழை மருத்துமனையில் சேர்த்தபோது அவர் உயிரிழந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த ம.ஜெனுசன் (வயது–24) ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் குற்றவாளிகளை கைது செய்யுமாறும் அவரது உறவினர்கள் பொலிஸாரை கோரியுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் ஆரம்ப விசாரணையின் பின்னரே காரணம் கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளார் .
Leave a comment