யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையிலேயே இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின் வீட்டில் இருந்து 1கிலோகிராம் கஞ்சா மற்றும் 10கிராம் ஹெரோயின் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட சான்று பொருட்கள் என்பன மதுவரித் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது..
#SrilankaNews
Leave a comment