தற்போது நாட்டில் ஒரு கிலோ மஞ்சள் தூள் 6 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது
நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் மேற்படி தெரிவித்துள்ளது. இவ் விடயம் தொடர்பில் இவ் அமைப்பின் தலைவர் மேலும் தெரிவிக்கையில்,
மஞ்சள் 6000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதன் காரணமாக நுகர்வோர் பெரும் அவல நிலையை எதிர்கொள்கின்றனர்.
இதனால் மக்கள் 50 கிராம் மற்றும் 100 கிராம் மஞ்சள் தூளை வாங்குகின்றனர். அதற்கே அவர்கள் 100 முதல் 600 ரூபா வரை செலவழிக்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் சில நிறுவனங்கள் 20 கிராம் மஞ்சள் தூளை 170 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றன.
எனவே, அரசு இது தொடர்பில் கவனம் செலுத்தி சிறந்த திட்டத்தை வழிவகுக்க வேண்டும் – என்றார்.
Leave a comment