பல வருடங்களாக பொலிசாரும் போதைப்பொருள் தடுப்புபிரிவும் தேடிவந்த கில்லாடி போதைப்பொருள் வியாபாரி இன்றைய தினம் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பல வருடங்களாக பொலிசாரின் தீவிர கண்காணிப்பில் இருந்த பேதைப்பொருள் வியாபாரி கொழும்பிலிருந்து போதைப்பொருளை கடத்தி வந்து கல்குடாப் பிரதேசத்தில் விற்பனையில் ஈடுபட்ட போது பிறந்துரைச்சேனை 2ம் குறுக்கு வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய களுவாஞ்சிகுடி விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
இவரிடமிருந்து 30 கிராம் ஐஸ் போதைப் பொருளும் போதைப்பொருள் விற்பனைக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டதுடன், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 540,000 ரூபா என தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
#SriLankaNews
Leave a comment