யா/சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையின் கால்கோள் விழா

2023 ஆம் ஆண்டின் தரம் ஒன்றுக்கு மாணவர்களை பாடசாலைக்கு உள்வாங்கும் கால்கோள் விழா யாழ். சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையில் நேற்றைய தினம் சிறப்பாக இடம்பெற்றது.

கல்லூரி பிரதி அதிபர் சிவநாவலன் தலைமையில் கால்கோள் விழா இடம்பெற்றது. முதன்மை விருந்தினர், இந்து மத குரு மற்றும் விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.

தரம் இரண்டு மாணவர்கள் புதிதாக இணைந்து கொள்ளும் மாணவர்களுக்கு மாலை அணிவித்து, பாடசாலைக்கு அழைத்து வந்தனர்.

பிரதான மண்டபத்தில் பாடசாலை பிரதி அதிபர் சிவநாவலன் மங்கள விளக்கினை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

தரம் இரண்டு மாணவர்களின் வரவேற்பு நடனம், தரம் ஒன்று மாணவர்கள் உட்பட அனைவரையும் கவர்ந்தது.

நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2023 03 29 at 3.41.48 PM 1

#SriLankaNews

Exit mobile version