santhiya
இலங்கைசெய்திகள்

உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க பெண் – சந்தியா தெரிவு

Share

2022 ஆம் ஆண்டுக்கான உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராக இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளர் சந்தியா எக்னலிகொட பிபிசியால் பெயரிடப்பட்டுள்ளார்.

அரசியல், அறிவியல், விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் இலக்கியம் போன்ற பல துறைகளைச் சேர்ந்த பெண்களை உள்ளடக்கி, உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க 100 பெண்களின் பட்டியலை பிபிசி வெளியிட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு முதல் காணாமல் ஆக்கப்பட்ட புலனாய்வு ஊடகவியலாளரும் மற்றும் கேலிச்சித்திர கலைஞருமான பிரகீத் எக்னலிகொடவின் மனைவியான சந்தியா எக்னலிகொட, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தவர்.

இலங்கையில் காணாமல் போனவர்களின் தாய்மார்கள் மற்றும் மனைவிகளுக்கு ஆதரவாக அவர் மேற்கொண்ட பணிகளுக்காக அவர் பல பாராட்டுக்களைப் பெற்றதுடன், மனித உரிமைகளுக்காகஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் பல அறிக்கைகளை சந்தியா வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10
இலங்கைசெய்திகள்

அநுரவை விரட்ட நாமல் கொண்டுள்ள அபார நம்பிக்கை

மக்களின் ஆணையை மீறிச் செயற்படும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவையும் அவர் தலைமையிலான அரசையும் மக்களின் ஆதரவுடன்...

9
இலங்கைசெய்திகள்

இனம்தெரியாத நோயினால் பாதிக்கப்படும் குரங்குகள்! மனிதர்களுக்கு பரவும் ஆபத்து

பொலன்னறுவைப் பிரதேசத்தில் குரங்குகள் மற்றும் மந்திகள் இனம்தெரியாத நோயொன்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த நோய் மனிதர்களுக்கு தொற்றும்...

8
இலங்கைசெய்திகள்

சுனில் ஹந்துன்னெத்திக்கு சிகிச்சையளிக்க தயார்! அர்ச்சுனா எம்.பி பகிரங்கம்

அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி நோயொன்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு சிகிச்சையளிக்க ஒரு மருத்துவர் என்ற ரீதியில் தான்...

7
இலங்கைசெய்திகள்

சமூக கட்டமைப்பை சீர்குலைக்க சதி செய்யும் ஹரிணி மற்றும் சரோஜா..! எழுந்துள்ள குற்றச்சாட்டு

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோர் குடும்ப பிணைப்பு மற்றும்...