tamilnij 3 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் உலக வங்கி

Share

நாட்டின் பொருளாதாரம் 2023இல் 3.8 சதவீத எதிர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

எனினும் இந்த வருடத்தில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் குறித்த உலக வங்கியின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும், நாட்டின் பொருளாதாரம் இந்த வருடத்தில் 1.7 வீதமாகவும் 2025ஆம் ஆண்டில் 2.4 வீதமாகவும் வளர்ச்சியடையும் என உலக வங்கி கணித்துள்ளது.

அத்துடன் 2022 – 2023 நிதியாண்டில் இலங்கையின் உற்பத்தியும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இறையாண்மைக் கடன் மறுசீரமைப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், தனியார் கடன் வழங்குநர்களுடன் இலங்கைக்கான கண்ணோட்டம் நிச்சயமற்றதாகவே உள்ளது என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
08 2
செய்திகள்இலங்கை

ஈரான் மீதான தாக்குதலுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடும் கண்டனம்: ரிஷாட் பதியுதீன் அறிக்கை

ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் இறையாண்மைக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும்...

07 2
செய்திகள்அரசியல்இலங்கை

ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடர்: பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க இலங்கைக்கு மீண்டும் அழுத்தம்

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 61-வது கூட்டத்தொடரில், இலங்கை...

06 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகத்தின் இடைநிறுத்தத்திற்கு எதிராக வழக்கு: மார்ச் 18-ல் விசாரணை

நாடாளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, தனது பணி இடைநிறுத்தத்தை எதிர்த்துத் தாக்கல்...

05 2
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கில் அமேசான் தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்: வங்கி மற்றும் இணைய சேவைகள் முடக்கம்

மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர் சூழலுக்கு மத்தியில், உலகின் முன்னணி கிளவுட் சேவை வழங்குநரான அமேசான்...