ranil wickremesinghe at parliament
அரசியல்இலங்கைசெய்திகள்

பெண்கள் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும்!

Share

கல்விக்கான பிராந்திய கேந்திர நிலையமாக இலங்கையை மேம்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (01) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தின் எட்டாவது நாள் இன்று (01) கல்வி, பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுகளுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, பாராளுமன்றத்தைப் போன்று ஏனைய துறைகளுக்குமான பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

பெருந்தோட்டத்துறையில் பணியாற்றுபவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். ஆனால் அங்கு பணிப்பாளர் சபையில் ஒரு பெண்கள்கூட இல்லை. இதேபோன்று ஆடை தொழிற்துறையிலும் இவ்வாறே. விசேடமாக இந்தவிடயத்தில் அரசாங்கமும் தனியார்துறையினரும் தவறுசெய்துள்ளன என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிதார்.

கல்வித்துறையில் முதலீடுகளை மேற்கொண்டு அபிவிருத்தி செய்வதன் மூலம் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் எமது மாணவர்களுக்காக செலவிடப்படும் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை சேமிக்க முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் ஒருமித்த கருத்துக்கு வருமாறு சபையில் கோரிக்கை விடுத்த ஜனாதிபதி, தனியார் பல்கலைக்கழகங்களை அறிமுகப்படுத்துவதற்கு அல்லது அதற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பெண்களின் பிரச்சினைகள் பற்றி அனைவரும் கவனம் செலுத்துவது அவசியமாகும். அநாதை பிள்ளைகளுக்கும், விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கும் அவசியமான வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். தேவையானவர்களுக்கு மாத்திரம் சமுர்த்தியை வழங்குவதன் மூலம் சமூகப் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை மேலும் முறையான விதத்தில் நடைமுறைப்படுத்த முடியும்.

25 ஆண்டுகளுக்கு முன்னெடுத்துச் செல்லக்கூடிய பாடசாலைக் கல்வி கட்டமைப்பு வேலைத்திட்டத்தை அடுத்த வருடம் முதல் ஏற்படுத்துவது அவசியமாகும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...