24 2
இலங்கைசெய்திகள்

அழகு நிலையத்திற்கு சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்: தேடுதல் உத்தரவு பிறப்பிப்பு

Share

அழகு நிலையத்திற்கு சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்: தேடுதல் உத்தரவு பிறப்பிப்பு

மினுவாங்கொடை நகரிலுள்ள அழகு நிலையமொன்றில் ஏற்பட்ட தலைமுடி உதிர்வு சம்பவம் தொடர்பில் அழகு நிலைய உரிமையாளரையும், உதவியாளர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு மினுவாங்கொடை நீதவான் டி தேனபந்து தேடுதல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நேற்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், அழகு நிலையத்தில் பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்களின் வகைகளை சரிபார்த்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவும் நுகர்வோர் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை நகரிலுள்ள அழகு நிலையமொன்றுக்கு தலைமுடியை சீர்செய்வதற்காக சென்ற பெண்ணொருவர் திடீரென ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக கடுமையான முடி உதிர்வு ஏற்பட்டு கம்பஹா பொது வைத்தியசாலையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பொரகொடவத்தை பகுதியைச் சேர்ந்த முப்பத்தைந்து வயதுடைய பெண் மினுவாங்கொடை பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் அழகு நிலைய உரிமையாளரையும், உதவியாளர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு மினுவாங்கொடை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் பின்னர் அழகு நிலைய உரிமையாளரும் அவரது உதவியாளர்களும், அழகு நிலையத்தை மூடிவிட்டு தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...

articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...