நீர்த்தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு! விசாரணை ஆரம்பம்

நீர்த்தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு! விசாரணை ஆரம்பம்

நீர்த்தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு! விசாரணை ஆரம்பம்

நீர்த்தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு! விசாரணை ஆரம்பம்

தலவாக்கலை பகுதியில் நீர்த்தேக்கம் ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலவாக்கலை, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து குறித்த பெண்ணின் சடலம் இன்றைய தினம் (10.07.2023) முற்பகல் 11 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

60 வயது மதிக்கதக்க பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரின் பெயர், ஊர் தொடர்பான உரிய தகவல்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.

இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தலவாக்கலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version