முதுகெலும்பு இல்லாமல், இன்று அரசு துவண்டு போயுள்ளது என நுகர்வோர் அதிகாரசபை பணிப்பாளர் சபையின் முன்னாள் உறுப்பினர், பேராசிரியர் அஜந்தா பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.
எரிவாயு தட்டுப்பாட்டுக்கு எதிராக இன்று (29) கொழும்பில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்;
நாடளாவீய ரீதியில், எரிவாயு தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ள அதேவேளை, எரிவாயுக் கொள்கலன்கள் வெடிக்கின்றபோதும் அதற்கு பொறுப்பானவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்படவில்லை.
எரிவாயு வெடிப்புக்கள் காரணமாக ஏற்பட்ட சேதங்களுக்கு, இதுவரை நட்டஈடு எதுவும் இடம்பெறவில்லை என அஜந்தா பெரேரா குற்றம் சுமத்தினார்.
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 பேரும், வீடுகளில் உணவு உண்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு இந்தப் பிரச்சினையின் பாதிப்பு தெரிந்திருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
#SrilankaNews
Leave a comment