யாழ்ப்பாணத்தில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் வசிப்போர் மிகவும் அவதானமாக இருக்குமாறு யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.
தற்போதுள்ள தாழமுக்கத்தின் காரணமாக யாழ் மாவட்டத்தின் கடற்கரையோரங்களில் காற்றின் வேகமானது 60 தொடக்கம் 65 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால், கடற்கரையை அண்டிய பகுதியில் வசிப்போர் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன், கடல் தொழிலுக்கு செல்வோர் மிகவும் அவதானமாக செயற்படுமாறும், மறு அறிவித்தல் வரும் வரை அவதானமாக செயற்படுமாறும் யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment