24 666136c5c87f6
இலங்கைசெய்திகள்

விமல் வீரவன்சவிற்கு அமைச்சுப் பதவி

Share

விமல் வீரவன்சவிற்கு அமைச்சுப் பதவி

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவிற்கு(Wimal Weerawansa) முக்கிய அமைச்சுப் பதவி வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுப் பதவியொன்றை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் தேசிய சுதந்திர முன்னணியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி தேர்தலின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதற்கு இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு விமல் வீரவன்சவும் இணக்கம் வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர தலைமையிலான மவ் பிம ஜனதா கட்சி கூட்டணியில் இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதிக்கு ஆதரவளித்தல் மற்றும் அமைச்சுப் பதவி குறித்த பேச்சுவார்த்தை தொடர்பில் விமல் தரப்பு அதிகாரபூர்வமாக இன்னும் தகவல்களை வெளியிடவில்லை.

Share
தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...