தற்போதைய அமைச்சரவை மறுசீரமைக்கப்படுமா என எம்மால் எதுவும் கூறமுடியாது. அது தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிப்பார் என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
2022 ஜனவரி ஆரம்பத்தில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது என தகவல் வெளியாகிய தகவலை அடுத்து , அதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றனவா என சபையில் கேள்வி எழுப்பப்பட்டது.
அமைச்சரவை மாற்றம் குறித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவிவருகின்றன. மாற்றம் பற்றி எமக்கு உறுதியாக கூறமுடியாது. அரசமைப்பின் பிரகாரம் அதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அவர் நினைத்தால் மறுசீரமைப்பு செய்யலாம் எனத் தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment