ranil mp 1
அரசியல்இலங்கைசெய்திகள்

அலரி மாளிகை செல்லமாட்டேன்! – பிரதமர் ரணில் தீர்மானம்

Share

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகைக்கு வசிப்பதற்காக செல்லப்போவதில்லை என்ற தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

அவர் தமது தனிப்பட்ட இல்லத்தில் வசிப்பதுடன் அலரி மாளிகைக்கு செல்லாமல் கொழும்பு ப்ளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்திலிருந்தே உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் அலுவலகத்தின் செலவை நூற்றுக்கு 50 வீதமாக குறைப்பதற்கு தீர்மானித்து அதுதொடர்பான பணிப்புரைகளையும் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில் செலவை குறைப்பது தமக்கும் பொருந்தும் என்பதை வெளிப்படுத்துவதற்காக அவர் அலரி மாளிகைக்குச் செல்லாமல் ப்ளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்திலிருந்து கடமைகளை செய்வதற்கு தீர்மானித்துள்ளார்.

அதேவேளை நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகையில் குடியிருப்பதற்காக செல்லவில்லை என்றும் தேவையான உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்காக மட்டுமே அலரி மாளிகையை உபயோகப் படுத்தியதாகவும் பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 69244e1b9b269
செய்திகள்அரசியல்இலங்கை

திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற கட்டுமானம்: விகாராதிபதி உட்பட சிலருக்கு நீதிமன்ற அழைப்பாணை!

திருகோணமலை கோட்டை வீதியின் கடற்கரையோரமாக அனுமதியற்ற கட்டுமானம் ஒன்றை கடந்த நவம்பர் 15 ஆம் திகதி...

images 1 2
செய்திகள்இலங்கை

பிரபாகரனின் 71வது பிறந்தநாள்: வல்வெட்டித்துறையில் வெகு விமர்சையாகக் கொண்டாட்டம்!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றைய தினம் (நவம்பர் 26) யாழ்ப்பாணத்தில்...

images 8
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டின் வேலையின்மை விகிதம் 3.8% ஆகக் குறைந்தது: 365,951 பேர் வேலையில்லாமல் உள்ளனர் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

நாட்டில் தற்போது 365,951 பேர் வேலையில்லாமல் இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (நவம்பர் 26)...