“அகலம் இன்னும் அதிகம்” என்பதை நேற்றையதினம் வடக்கில் இடம்பெற்ற நிகழ்வுகள் தெளிவாக விளக்கிக் கூறுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக நேற்றையதினம் யாழ். சாட்டியில் மாவீரர் நினைவேந்தல் மேற்கொள்ள சென்ற சட்டத்தரணி சுபாஷ் தலைமையிலான குழுவினரை துப்பாக்கி தாங்கிய இராணுவத்தினர் இடைமறித்து அச்சுறுத்தினர். இந்த நிலையில் அங்கு சென்றவர்கள் அவர்கள் இடைமறித்த பகுதியிலேயே துப்பாக்கி முனைக்கு நேராக அவ்வித அச்சமுமின்றி மாவீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.
இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறித்த புகைப்படத்தை தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டு இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மனோ கணேசன்,
“ஆயுத போராட்டத்தை மீள ஆரம்பிக்க அல்ல என தெரிந்த நிலையிலும், இதே நினைவுகூரல் உரிமைகள் சிங்கள தெற்கிற்கு வழங்கப்பட்ட நிலையிலும், மரணித்தோரை நினைவுறுத்தும் உலகளாவிய உரிமை அடிப்படையில் நிகழும் நினைவுகூரல்களை சகித்துக்கொள்ள முடியாமை, இத்தனை காலம் கடந்தும், இலங்கையில் சிங்கள-தமிழ் இடைவெளி வெகு அகலமாகத்தான் இன்னமும் இருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaNews
Leave a comment