நாட்டில் பொருட்களின் விலைகள் கட்டுப்பாடின்றி எகிறிச் செல்கின்றன. ஆனால் அவற்றை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவ்வாறு கட்டுப்படுத்த வாய்ப்புக்கள் இல்லை என அரசாங்கம் காரணங்களை கூறி வருகின்றது. அவ்வாறாயின், நாட்டுக்கு அரசாங்கம் எதற்கு?
இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கம் குறைந்தபட்சம், நாட்டின் பொருளாதாரத்தைக்கூட முகாமைப்படுத்திக்கொள்ள முடியாது என்பதை நன்றாக நிரூபித்துள்ளது.
நாட்டு மக்கள், எதிர்கொள்ளும் விலைவாசி உட்பட இக்கட்டான நிலைமைகளில் இருந்து, அவர்களை மீட்பதற்கான திறன் அரசிடம் இல்லையென்றால், அதை ஏற்றுக்கொண்டு உடனடியாக விளக்க வேண்டும்.
உண்மையை ஒப்புக்கொண்டு நாட்டை மக்களை பாதுகாப்பதுடன், நாட்டை கட்டியெழுப்பக்கூடிய குழுவிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.
மக்களுக்கான அனைத்து வருமான வழிகளும் நாட்டில் தடுக்கப்பட்டுள்ளன. மக்கள் ஆதரவற்ற நிலையில் உள்ளனர். அத்துடன் நாட்டில் போஷாக்கு குறைபாடும் அதிகரித்து வருகின்றது. – என்றார்.
Leave a comment