மக்கள் சந்திப்பு நாட்களில் ஆளுநர் எங்கு செல்கின்றார் என முன்பள்ளி ஆசிரியர்கள் கேள்வியெழுப்பிள்ளனர்.
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் இன்றைய தினம் சம்பள அதிகரிப்பை கோரியும் , நிரந்தர நியமனம் மற்றும் விடுமுறைகள் சிக்கல்களை நிவர்த்திக்க கோரியும், இன்றைய தினம் ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது குறித்த முன்பள்ளி ஆசிரியர்கள் சார்பில் பிரதிநிதிகள் சிலரை ஆளுநர் அலுவலக அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அவர்கள் ஆளுநர் வவுனியாவில் நடக்கும் நடமாடும் சேவைக்கு சென்றிருப்பதாகவும் இதனால் இன்றைய தினம் அவரை சந்திக்க முடியாது.
எனவும் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு ஆளுநர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரமாட்டார் எனவும் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து குறித்த பிரதிநிதிகள் முன்பள்ளி ஆசிரியர்களிடம் அவர்களுள் அவர்கள் அதிகாரிகள் தெரிவித்ததை தெரிவித்தனர்.
இதன்போது முன்பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொரு தடவையும் தாங்கள் வந்து ஏமாறுவதாகவும் திங்கட்கிழமைகளில் மக்கள் சந்திப்பு என தெரிவித்துவிட்டு ஆளுநர் ஒவ்வொரு திங்களும் எங்கு செல்கிறார் எனவும் கேள்வி எழுப்பினார் .
இதனையடுத்து ஆளுநர் இங்கு வரும் வரைக்கும் தாம் இங்கு அமர்ந்து போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
#SrilankaNews

