” நாட்டு மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிமடுக்க வேண்டும். வரிசை யுகம் எப்போது முடிவுக்கு வரும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர்,
” எதிரணிகளின் யோசனைகளை அரசு செயற்படுத்தவில்லை. ஆபத்து நிலையை அன்றே நாம் சுட்டிக்காட்டினோம். தற்போது அதிகாரிகள்மீது பழிபோடுவதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது. இந்நிலைமைக்கு அரசும் பொறுப்புக்கூறவேண்டும்.
உறுதியான தீர்வுகளை முன்வைக்க வேண்டும். கேஸ் வரிசை, பெற்றோல் வரிசை, டீசல் வரிசை, மண்ணெண்ணெய் வரிசை, பால்மா வரிசை எப்போது முடிவுக்கு வரும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.” – என்றும் குறிப்பிட்டார்.
#SriLankaNews
Leave a comment