tamilni 129 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு இம்மாத இறுதிக்குள் கிடைக்கவுள்ள கொடுப்பனவு!

Share

இலங்கை மக்களுக்கு இம்மாத இறுதிக்குள் கிடைக்கவுள்ள கொடுப்பனவு!

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை இம்மாத இறுதிக்குள் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சமூக நலன்புரி நன்மைகள் சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

மேலும், அஸ்வெசும தொடர்பில் கிடைத்துள்ள மேன்முறையீடுகள் மீதான விசாரணைகளின் பின்னர் தெரிவு செய்யப்படும் பயனாளிகள் தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் அறிவிக்கப்படும் எனவும் சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

மேன்முறையீடுகள் மற்றும் எதிர்ப்புகள் தொடர்பான விசாரணைகளின் பின்னர் அதற்கான பதில்களை 20 நாட்களுக்குள் வழங்குமாறு மேன்முறையீட்டு சபைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சமூக நலன்புரி நன்மைகள் சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இதுவரை 08 இலட்சம் மேற்முறையீடுகளும் 10,000-இற்கும் அதிக எதிர்ப்புகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலும், இம்மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை மாத இறுதிக்குள் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Schools
செய்திகள்இலங்கைபிராந்தியம்

10 ஆண்டுகளாக வரலாற்று ஆசிரியர் இல்லை: மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தின் அவலநிலை அம்பலம்!

யாழ்ப்பாணம் மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் கடந்த பத்து வருடங்களாக வரலாற்றுப் பாடத்தைக் கற்பிக்க ஆசிரியர் எவரும்...

1770006808 dalai 6
செய்திகள்உலகம்

90 வயதில் கிராமி விருது வென்று தலாய் லாமா சாதனை: The Reflections ஆல்பத்திற்கு உயரிய அங்கீகாரம்!

திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா, தனது 90 ஆவது வயதில் முதல்முறையாக ‘கிராமி’ (Grammy) விருதை...

1675419473 gavel 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஷமிந்திர ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான கொள்வனவு மோசடி விவகாரம்!

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் இளைய மகனான ஷமிந்திர ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில்...