tamilni 70 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டில் அதிகரிக்கவுள்ள மழைவீழ்ச்சி! காலநிலையில் மாற்றம்

Share

நாட்டில் அதிகரிக்கவுள்ள மழைவீழ்ச்சி! காலநிலையில் மாற்றம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. இ

தற்கமைய மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை, அனுராதபுரம், மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
Srilankan Airlines
இலங்கை

நிறுத்தப்பட்டது இலங்கை விமான போக்குவரத்து – இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை.

மீண்டும் மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச்சூழல் காரணமாக, குவைத் நாட்டிற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான...

manokanesan
இலங்கை

அரசை வீட்டிற்கு அனுப்புவோம் – மனோ கணேசன் சூளுரை.

“நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படக் கூடாது எனவும் 2029ஆம் ஆண்டு...

thadampuralvu
இலங்கை

மீண்டும் தடம் புரண்டது 1164 இலக்க தொடருந்து.

சற்றுமுன்னர் கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளதாள், தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகளின்...

train
இலங்கை

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.

நேற்று மாலை, கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...