selvam
இலங்கைஅரசியல்செய்திகள்

ஆளும் தமிழ்க்கட்சிகளுக்கும் செல்வம் அழைப்பு!!

Share

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவு வழங்கும் ஆளுங்கட்சியிலுள்ள தமிழ் பேசும் கட்சிகளுக்கும் எதிர்காலத்தில் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதத்திலான சந்திப்பின் இரண்டாம்  கூட்டம் டிசம்பர் 12 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், புளொட், ஈபிஆர்எல்எப்,  தமிழ் தேசியக் கட்சி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்தியாவிடம் ஒருமித்தக் குரலில் கோரிக்கை விடுப்பதற்கும், கடந்த நவம்பர் 02 ஆம் திகதி யாழில் முதலாவது கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் ஆளுங்கட்சியிலுள்ள தமிழ் பேசும் கட்சிகளுக்கு ஏன் அழைப்பு விடுக்கப்படவில்லை என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே செல்வம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈபிடிபி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்பன ஆளுந்தரப்பிலிருந்து 13 ஐ ஆதரிக்கும் தமிழ்க் கட்சிகளாகும்.

 

 

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...