” சர்வக்கட்சி வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினாலும், அமைச்சு பதவிகளை பெற்றுகொள்ளமாட்டோம்.” – என்று பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் டலஸ் ஆதரவு அணி உறுப்பினர்கள் கொழும்பில் இன்று ஊடக சந்திப்பொன்றை நடத்தினர்.
இதன்போதே மொட்டு கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பியான பீரிஸ் இவ்வாறு கூறினார்.
” மக்கள் நலன்சார்ந்து அரசால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும். எனினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதவிகளை ஏற்பதற்கு தயாரில்லை.” – எனவும் பீரிஸ் குறிப்பிட்டார்.
#SriLankaNews
Leave a comment