உள்நாட்டுப் பிரச்சினைகள் உள்ளக விசாரணை மூலமே தீர்க்கப்படும். எந்தச் சந்தர்ப்பத்திலும் சர்வதேசத்திடம் ஒப்படைப்பதற்கு இலங்கை ஒருபோதும் தயார் இல்லை.
இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவில் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான அழுத்தங்களுக்கு நாம் அடிபணியமாட்டோம். இலங்கையின் தனித்துவங்களை பாதுகாத்து இறையாண்மை நோக்கி பயணிக்க அரசு வழிவகைகளை மேற்கொள்ளும்.
உள்நாட்டு பிரச்சினையைத் தீர்க்கும் பொறுப்பை சர்வதேசத்திடம் ஒப்படைக்க இலங்கை அரசு ஒருபோதும் தயார் இல்லை.
வெளிநாட்டு பொறிமுறை எமது நாட்டின் அரசமைப்புக்கு முரணானது. அத்துடன் எமது அரசியல் கட்டமைப்புக்கு எதிரானதுமாகும்.
வேறு நாடுகளில் பிரச்சினைகள் பல உள்ள நிலையில் எமது நாட்டின் மீது உள்ள பார்வையில் எந்த அடிப்படைக் காரணமும் இல்லை.
மேலும் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் மற்றும் நாடுகளுடன் இலங்கை தொடர்ந்தும் நல்லுறவைப் பேணும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment