” இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்னும் போதுமான பாதுகாப்பு வழங்கப்படவில்லை. எனவே, என்னையும், எனது குடும்பத்தினரையும் இந்தியாவுக்கு அழைத்து சென்று பாதுகாப்பு வழங்கும்படி இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.”
இவ்வாறு முன்னாள் ராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து தான் திருப்தி அடையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்றுவரை பல்வேறு இடங்களில் மறைந்து வாழ்வதாகவு தெரிவித்த திசாநாயக்க , 21 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்காவிட்டால் சொந்த ஊருக்கு திரும்பமுடியாமல் போய்விடும் என ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்த கருத்து அவர் வன்முறைக்கு அழைப்பு விடுப்பது போலிருக்கின்றதென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
#SriLankaNews