vimal 1
அரசியல்இலங்கைசெய்திகள்

நாமலுக்கு அறிவும் இல்லை, அனுபவமும் இல்லை!!

Share

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஒரு ப்ரொய்லர் கோழி போன்றவர் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச பொதுவெளியில் தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

”மக்கள் துன்பத்தில் இருக்கும் போது சில பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து நாமல் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். நாமலுக்கு எந்தவித அனுபவமும் அரசியல் அறிவும் இல்லை.

அவரும் ரணில் போன்றவர் தான். இன்றுவரை அவர் எதையும் கற்றுக் கொள்ளவில்லை. மக்கள் ஆத்திரமடைவதில் ஒரு நியாயம் இருக்கிறது. அவர் எப்போதும் கற்றுக் கொள்ளப் போவதில்லை. அவர் முன்கூட்டியே வளர்ந்த ஒரு ப்ரொய்லர் கோழி. தகுதி இல்லாதவர்களும் செல்வாக்கைப் பயன்படுத்தி ஆட்சிப்பீடம் ஏறியது தான் இந்த நாட்டினதும் ராஜபக்ஷ குடும்பத்தினதும் வீழ்ச்சிக்குக் காரணமாகும்.

கடந்த பொதுத்தேர்தலில் பதுளை மாவட்டத்தில் யோஷித்த ராஜபக்ஷவை களமிறக்க அவர்கள் திட்டமிட்டனர். டலஸ் அழகப்பெரும தான் கோட்டாபய ராஜபக்ஷவிடம் அதை தடுத்து நிறுத்தும்படி மன்றாடிக் கேட்டுக் கொண்டார்” என ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டபோது விமல் வீரவன்ச தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...