இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில், ஒரு மூட்டை சீமெந்து விலை 3,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதால் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டு கூலி வேலைக்கு செல்ல முடியாததால் வாழ வழியின்றி தமிழகத்திற்கு அகதியாக வந்ததாக தனுஸ்கோடி வந்துள்ள இலங்கை தமிழர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியை சேர்ந்த உதயகுமார், ரோஜா, அவர்களது மூன்று குழந்தைகள் மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நியூட்டன் நிர்மல் ராஜ் ஆகிய அறுவரே, பைப்பர் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை தனுஸ்கோடி, கம்பிபாடு கடற்கரையில் வந்திருங்கினர்.
தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இலங்கைத் தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அத்தியவாசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை விலை அதிகரித்தள்ளது. அதே போல் டீசல் மற்றம் பெட்ரோல் விலையும் வெகுவாக உயர்ந்துள்ளது.
விலைவாசி ஒரு பக்கம் உயர்வு, மறுபக்கம் அத்தியாவசிய பொருட்களின் தட்டுபாடு அதிகரித்துள்ளது, 2 லிட்டர் மண்ணெய் வாங்க 4 நாட்கள் வரிசையில் நிற்கவேண்டியுள்ளது, தொடர் மின்வெட்டு, அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுபாடு உள்ளது. மேலும் ஒரு மூட்டை சிமெண்ட் விலை 3,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டு கூலி வேலைக்கு செல்ல முடியாததால் வாழ வழியின்றி , ஒரு லட்சம் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து பைப்பர் படகில் தமிழகத்துக்கு அகதிகளாக வந்தோம்.” என்று தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 129 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
#SriLankaNews