vinoo
அரசியல்இலங்கைசெய்திகள்

கண்ணை மூடிக்கொண்டு சிக்குவதற்கு நாம் தயாரில்லை!

Share

” சர்வக்கட்சி அரசு என்ற வலையில் கண்ணை மூடிக்கொண்டு சிக்குவதற்கு நாம் தயாரில்லை. எனவே, அரசியல் தீர்வு முன்வைக்கப்பட்டால் மாத்திரமே சர்வக்கட்சி அரசுக்கு ஆதரவு வழங்கப்படும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் கடந்த 3 ஆம் திகதி ஆற்றிய கொள்கை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று 3 ஆவது நாளாகவும் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வினோ எம்.பி. இவ்வாறு கூறினார்.

” மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் 13 பிளஸ் எனக் கூறப்பட்டாலும் எதுவும் நடக்கவில்லை. நல்லாட்சியின்போதும், அரசியல் தீர்வு திட்டம் குறித்து பல சுற்று பேச்சுகளை நடத்தியிருந்தோம். ஆனால் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக செயற்பட்ட ரணில் விக்கிரமசிங்கவும் எம்மை கூட்டாக ஏமாற்றினர்.
எனவே, கண்ணைமூடிக்கொண்டு சர்வக்கட்சி அரசை ஆதரிப்பதற்கு நாம் தயாரில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 எம்.பிக்கள் அங்கம் வகித்தனர்.அந்த எண்ணிக்கை தற்போது 10 ஆக குறைந்துள்ளது. தமிழ் மக்களிடமிருந்து எம்மை அந்நியப்படுத்தும் சகுனி ஆட்டம் இனியும் எடுபடாது, அவ்வாறான முயற்சி முன்னெடுக்கப்பட்டாலும் ஏமாற நாம் தயாரில்லை.

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்.” – எனவும் வினோநோதராதலிங்கம் குறிப்பிட்டார்.

அதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் 2000 நாட்களுக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் தொடர்பிலும் அவர் சபையின் கவனத்தை ஈர்த்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Cyril Gamini 700x375 1
இலங்கைசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் ஆதாரங்களை அழித்த இராணுவம்! சிக்கலில் அருண ஜெயசேகர

பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர உடனடியாக தனது பதவியை விட்டு விலக வேண்டும் என்று...

20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...