அரசில் இருந்து வெளியேற்றப்படும் நபர்கள் எல்லோரையும் இணைத்துக்கொள்ளும் அளவுக்கு எமது கட்சி வங்குரோத்து அடையவில்லை.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ள விமல்வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்களை ஐக்கிய மக்கள் சக்தி இணைத்துக்கொள்ளுமா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இது தொடர்பில் நாம் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அவர்கள் கடந்த காலங்களில் மக்கள் தவறாக வழிநடத்தினர். இது மக்களுக்கும் தெரியும். எனினும், நாம் பரந்தப்பட்ட கூட்டணியை அமைக்க முயற்சிக்கின்றோம்.
எனவே, அந்தக்கூட்டணியில் இணைய வேண்டியவர்கள் தொடர்பில் கட்சியின் மத்திய செயற்குழு முடிவெடுக்கும். அதேபோல அரசில் இருந்து வெளியேறுபவர்களை எல்லாம் இணைத்துக்கொள்ளும் அளவுக்கு எமது கட்சி வங்குரோத்து அடையவில்லை.” – என்றார்.
#SriLankaNews
Leave a comment