மாவட்டத்தின் பஹன் துடாவ நீர்வீழ்ச்சியை பின்னணியாகக் கொண்டு, அதன் அருகே ஆபாச காணொலியை தயார்செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ள சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட புகைப்படம் போலியானது.
இதனை அந்தப் புகைப்படத்திலுள்ள தம்பதியர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் நாம் பெரும் அசெளகரியத்துக்கு உள்ளாகியுள்ளோம். இதுபோன்ற செயலில் எவரும் ஈடுபட வேண்டாம் என சமூக வலைத்தளத்தை உபயோகிப்பவர்களிடம் குறித்த தம்பதியர் கோரியுள்ளனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு திருமணத்தின்போது பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். அந்தப் புகைப்படத்தை குறித்த சம்பவத்துடன் தொடர்புபடுத்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
எம்மை அவமதிப்புக்கு உள்ளாகிவிட்டனர். எமக்கு சமூகத்தில் பெரும் அவமானம் ஏற்பட்டுவிட்டது. இனியொருபோதும் இவ்வாறான செயல்களில் ஈடுபடவேண்டாம் என அனைவரிடமும் தாழ்மையுடன் கைகூப்பி கேட்கின்றோம் என அத் தம்பதியினர் கேட்டுள்ளனர்.
Leave a comment