பஹந்துடாவ நீர்வீழ்ச்சி பகுதியில் ஆபாசமாக வீடியோ பதிவு செய்த குற்றச்சாட்டில் தம்பதியர் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் அவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு 10 ஆயிரத்து 800 ரூபா அபராதம், 3 மாத சிறைத்தண்டனை மற்றும் 7 வருட ஒத்திவைக்கப்பட்ட தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து பலாங்கொட நீதிவான் நீதிமன்றால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எல்பிட்டியைச் சேர்ந்த 24 வயதுடைய பெண்ணும் மஹரகமவைச் சேர்ந்த 34 வயதுடைய ஆணும் நீர்வீழ்ச்சி அருகே ஆபாசமாக வீடியோ பதிவுசெய்து அதை சமூக வலைத்தள இணையத்தளத்தில் வெளியிட்டமைக்காக பொலிஸார் இவர்களை கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment