இன்று நீர் வெட்டு: விபரங்கள் இதோ!

water cut

கொழும்பின் பல பகுதிகளில் இன்றைய தினம் நள்ளிரவு முதல் 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இவ்வாறு தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

அம்பத்தளையில் இருந்து கொழும்பு வரையிலான நீர்க் குழாயின் பராமரிப்பு வேலைகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்படுகிறது எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

#SrilankaNews

Exit mobile version