3 7
இலங்கைசெய்திகள்

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : குறைக்கப்படவுள்ள மற்றுமொரு கட்டணம்

Share

நீர் கட்டணத்தை 10 முதல் 30 சதவீதம் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் (National Water Supply Drainage Board) பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டண குறைப்போடு ஒப்பிட்டு, நீர் கட்டணங்களையும் குறைப்பதில் கவனம் செலுத்தப்படுவதாக அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நீர்கட்டணக் குறைப்பு குறித்து ஆராய குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.

நீர் கட்டணங்களைக் குறைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அடுத்த சில நாட்களுக்குள் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

பின்னர் தலைவர் அந்த அறிக்கையை விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் கையளிப்பார் என்றும், பின்னர் அது தொடர்பான முன்மொழிவுகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
image 1200x630 4
செய்திகள்இலங்கை

மன்னாரில் பற்றியெரியும் குப்பைமேடு : மக்கள் கடும் பாதிப்பு

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகர சபையினால் கொட்டப்பட்டு குவிக்கப்பட்ட...

image 1200x630 3
செய்திகள்இலங்கை

தான் இறந்துவிட்டதாக வெளியான செய்தி குறித்து கருத்துவெளியிட்ட அரசியல்வாதி

தான் இறந்துவிட்டதாக ஒரு பொய்யான சமூக ஊடகப் பதிவு பரவி வருவதாகவும், இது குறித்து விசாரித்து...

image 1200x630 2
செய்திகள்உலகம்

ஆயுதங்களை கீழே போடுங்கள் ஹமாஸிற்கு அமெரிக்கா கண்டிப்பு

மத்திய கிழக்கில் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான மூத்த அமெரிக்க இராணுவத் தளபதி ஒருவர், “காசாவில் அப்பாவி பாலஸ்தீன...

image 1200x630 1 2
செய்திகள்இந்தியா

இலங்கை சிறைச்சாலைகளில் கடும் நெரிசல் நிலை

இலங்கையின் சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல் நிலை நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டிலுள்ள 36 சிறைகளில் சுமார்...