அரச பங்காளிக் கட்சிக்குள் மீண்டும் பனிப்போர் மூண்டுள்ளது என தகவல்கள் கசிந்துள்ளன.
கெரவலப்பிட்டியவில் ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கியமை தொடர்பில் அரசின் பங்காளிக் கட்சிகள் பல கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதில் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசு தேவ நாணயக்கார உள்ளிட்டோர் தலைமையிலான பங்காளிகளே, இவ்வாறு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் .
அத்துடன் கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலைய விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமருடன் பேச்சு நடத்தவ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகள் தீர்மானித்துள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்க எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்துக்கு நடந்த கதியே இங்கும் நடைபெறும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment