வனிந்து ஹசரங்கவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் வனிந்து ஹசரங்கவுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இரண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியின் போது ஒழுக்கமின்மை காரணமாக அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த போட்டியில் நடுவர் ஒருவரிடமிருந்து தொப்பியை அவர் பறித்துக்கொண்டதாகவும், அது ஒழுக்காற்று விதிகளை மீறுவதாகவும் கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த குற்றத்திற்காக மூன்று அபராத புள்ளிகள் விதிக்கப்பட்டுள்ளதுடன் போட்டி கட்டணத்தில் ஐம்பது சதவீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை அவர் இழக்கவுள்ளார். இந்த போட்டிக்கு அவர் பெயரிடப்படவில்லை என்றால், வரவிருக்கும் உலகக் கோப்பையின் முதல் நான்கு போட்டிகளை இழக்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.