டெல்லியில் பரவும் புதியவகை வைரஸ் தொற்று! உன்னிப்பாகக் கண்காணிக்கும் இலங்கை

13 3

இந்தியாவில், டெல்லி பெருநகரப் பகுதி உட்பட வடக்குப் பகுதிகளில் இன்ஃப்ளூயன்ஸா H3N2 திரிபு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் இந்தியாவின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக இலங்கை சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட இந்தியாவில், 46 மில்லியன் மக்கள் வசிக்கும் டெல்லி நகரத்தில் இந்த இலையுதிர்காலத்தில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.

உள்ளூர் வட்டாரங்களின் தற்போதைய கணக்கெடுப்பின்படி, இப்பகுதியில் உள்ள 69 சதவீத வீடுகளில் தற்போது ஒருவருக்கு வைரஸ் அறிகுறிகள் உள்ளது.

இந்திய வைத்தியர்கள் H3N2 தற்போது இப்பகுதியில் பரவும் இன்ஃப்ளூயன்ஸா வகைகளில் முதன்மையானது என்பதை உறுதிப்படுத்துகின்றனர்.

இலங்கை எந்தவொரு வைரஸ் தொற்று பரவலுக்கும் தயாராக இருப்பதோடு, தற்போதைய நிலைமை ஆபத்தானது அல்ல என பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

இந்த வைரஸ் தொடர்பில் அச்சம் அடைய தேவை இல்லை. பருவகால இன்ஃப்ளூயன்ஸா, பொதுவாக காய்ச்சல் மற்றும் மூக்கு ஒழுகுதல் ஆகியவற்றுடன் வெளிப்படுகிறது.

எமது சுகாதார அமைப்பு விழிப்புடன் உள்ளது. கவலைப்பட தேவையில்லை என மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த வகையான இன்ஃப்ளூயன்ஸா பரவல்கள் பிராந்தியத்தில் பருவகாலமாக மீண்டும் நிகழும் எனவும், இலங்கையில் நோயாளர்கள் கண்டறிப்பட்டால் வலுவான தடுப்பு நடவடிக்கைகள் உள்ளன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவில் அதிகரித்து வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை வைரஸின் விரிவான சுழற்சியை எடுத்துக்காட்டுகிறது என சுகாதார நிபுணர்கள் தொடர்ந்து எச்சரிக்கின்றனர்.

டெல்லியைத் கடந்து பிற மாநிலங்களிலும் தொற்றாளர்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version