இலங்கையில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஜி விஜேசூரிய மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய மருத்துவ ஆலோசனை பெறுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை, வைரஸ் காய்ச்சலால் தினமும் சுமார் 40 குழந்தைகள் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
#SriLankaNews
Leave a comment